ஆளுமை:விஜிதா, கிறிஸ்ணமூர்த்தி

From நூலகம்
Name விஜிதா
Pages கிறிஸ்ணமூர்த்தி
Pages பரஞ்சோதி
Birth 1997.06.03
Pages -
Place தளவாய், ஏறாவூர், மட்டக்களப்பு
Category தன்னார்வளத் தொண்டர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கிறிஸ்ணமூர்த்தி விஜிதா (1997.06.03) தளவாய், ஏறாவூர், மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் சமூக சேவையாளர் ஆவார். இவரது தந்தை கிறிஸ்ணமூர்த்தி;தாய் பரஞ்சோதி. இவருக்கு இரண்டு சகோதரங்கள் உள்ளனர். இவர் வகுப்பு ஒன்று முதல் பதினொன்று வரைக்கும் மட்/தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். பின்னர் உயர்தரத்தினை மட்/ குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தில் கற்றார். தொடர்ந்து தனது முதலாவது இளங்கலைமாணி பட்டத்தினை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கையில் பெற்றார். தற்பொழுது இவர் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களில் தன்னார்வளராகவும், வளவாளராகவும் தனது சமூகத்திற்கான சேவைகளினைச் செய்து வருகிறார். அவ்வகையில் காவியா பெண்கள் அமைப்பு, YMCA, CPPR, புதிய வாழ்வுக்கான நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தனது திறனை வெளிப்படுத்துவதோடு, தன் சமூகத்தில் காணப்படும் பால்நிலை சார்ந்த வன்முறைக்கெதிராகவும் செயற்பட்டு வருகிறார்.