ஆளுமை:விஜயலெட்சுமி, வைரமுத்து

From நூலகம்
Name விஜயலெட்சுமி
Pages வைரமுத்து
Pages கண்ணகை
Birth 1957.01.13
Place மட்டக்களப்பு
Category கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


விஜயலெட்சுமி, வைரமுத்து (1957.01.13) மட்டக்களப்பு துறைநீலாவணையில் பிறந்த கல்வியாளர். இவரது தந்தை வைரமுத்து; தாய் கண்ணகை. ஆரம்ப, இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு துறைநீலாவணை மகாவித்தியாலயத்திலும், உயர்நிலைக் கல்வியை மட்டக்களப்பு பெரியகல்லாறு மகாவித்தியாலயத்திலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார். பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், முதுமாணி தமிழ் பட்டத்தை பேராதனைப்பல்கலைக்கழத்திலும், சைவசித்தாந்த டிப்ளோமாவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், கல்வி முதுமாணியை புத்ரா மலேஷிய பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளதோடு மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியும் பெற்றுள்ளார் கல்வியியலாளர் விஜயலெட்சுமி. 1978ஆம் ஆண்டு தொடக்கம் 1993ஆம் ஆண்டு வரை ஆசிரியர் சேவையில் பணியாற்றியுள்ளார். பின்னர் தேசிய கல்வி நிறுவகத்தில் இந்து சமயத்துறையில் உதவிச் செயற்திட்ட அதிகாரியாகவும் செயற்றிட்ட அதிகாரியாகவும் பிரதம செயற்றிட்ட அதிகாரியாகவும் பணியாற்றினார். பின்னர் தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்துறைப் பணிப்பாளராகவும் இருந்துள்ளார். தேசிய கல்வி நிறுவகத்தில் பணியில் இருந்த காலங்களில் பாடசாலைக் கலைத்திட்டம் (பாடத்திட்டம், பாடநூல் தயாரித்தல், ஆசிரியர் கைநூல் தயாரித்தல், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கல்) கல்வி பொதுத்தராதர சாதாரணதரம், உயர்தர பரீட்சை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடல் போன்றவைகளை மேற்கொண்டுள்ளார். திறந்த பல்கலைக்கழக கலைமாணி பாடத்திட்டம் தயாரித்தல், திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் சேவையாற்றியுள்ளார். அரச மொழிகள் திணைக்களத்தில் கலைத்திட்ட பணிகளில் ஈடுபட்டதோடு, சிங்கள மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தும் உள்ளார். 24 வருடகால தேசிய கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய இவர் அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு விஜயலெட்சுமி, வைரமுத்து அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.