ஆளுமை:விஜயகுமார், அல்பிறட் றொபேட்

From நூலகம்
Name விஜயகுமார்
Pages அல்பிறட் றொபேட்
Birth 1961.06.15
Place இளவாலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயகுமார், அல்பிறட் றொபேட் (1961.06.15 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அல்பிறட் றொபேட். இவர் யாழ்ப்பாண மாவட்டக் கலாச்சாரப் பேரவைச் செயற்குழு உறுப்பினராகவும் இளவாலை புனித சென்றியூசர் கல்லூரி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் 1982 இலிருந்து நாடகக் கலையை ஆற்றத் தொடங்கி நாடகங்கள் தயாரித்தல், கிறிஸ்தவ இசை நாடாக்கள் தயாரித்தல், திருமறைக்கலாமன்றத்தில் நாடகம் நடித்தல், நெறியாள்கை செய்தல் போன்ற கலைப்பணிகளை ஆற்றியுள்ளார்.

இவர் 1998 இல் பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தினால் இசைஞன் என்ற பட்டத்தையும் 2006 இல் கலைஞானச்செல்வன் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 221