ஆளுமை:வாசுதேவன், இராசலிங்கம்

From நூலகம்
Name வாசுதேவன்
Pages இராசலிங்கம்
Birth
Place புங்குடுதீவு
Category மிருதங்கக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாசுதேவன், இராசலிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்க கலைஞர். இவரது தந்தை இராசலிங்கம். இவர் இளவயதில் யாழ்ப்பாணத்தில் ஏ.எஸ்.இராமநாதனிடமும் சென்னையில் பூவலூர் - ஶ்ரீநிவாசா, நெய்வேலி - வெங்கடேஷ், மடிப்பாக்கம் சுரேஷ் ஆகியோரிடமும் முறையாக மிருதங்கம் பயின்றார். இவர் பல ஆண்டுகளாகக் கச்சேரிகள், நாட்டிய அரங்கேற்றங்கள் போன்ற அனைத்திலும் தனது திறமையைக் காட்டி மிருதங்கக் கலையில் புகழ் பெற்று விளங்குகின்றார்.

இவர் 1987 இல் கனடாவுக்குச் சென்று மிருதங்க சேஷ்த்திரம் என்ற பாடசாலையை அமைத்து மிருதங்கத்துடன் வேறு இசைக் கருவிகளையும் கற்பித்து வருகின்றார். இவர் ஐந்நூறுக்கு மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் நூறுக்கு மேற்பட்ட நடன அரங்குகளிலும் மிருதங்கம் வாசித்து பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார். இவருக்குக் கனடாவின் தமிழர் தகவல் விருது கிடைத்திருக்கின்றது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 236-237