ஆளுமை:வல்லிபுரம், பொன்னையா

From நூலகம்
Name வல்லிபுரம்
Pages பொன்னையா
Pages -
Birth 1942.06.03
Place கிளிநொச்சி
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வல்லிபுரம், பொன்னையா (1942.06.03 -) கிளிநொச்சி, கோவில்வயலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. தனது முதலாவது மேடையேற்ற நிகழ்வை 1972 ம் ஆண்டு நெளியாய் அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த திருவிழாவில் காத்தவராயன் கூத்தில் ஆர்மோனிய வாசிப்புடன் தொடங்கினார். 1990, 1992 காலப்பகுதிகளில் நவனி வெளி அம்மன் , விஸ்வமடு அதிசய விநாயகர்,கண்ணகி நகர்,தட்டுவன்கொட்டி,நாகர்கோவில்,மாமுனை நாகதம்பிரான் போன்ற கோவில்கள் சென்று அண்ணாவியார்கள்டன் இணைந்து செயல்பட்டார்.

இவர் கோயில் வயல் GTMS, புன்னைநீராவி GTMS , இயக்கச்சி போன்ற பாடசாலைகளிலும் சென்று சரஸ்வதி பூஜைகள் தனது ஆர்மோனியக்கலையை மேடையேற்றினார்.2012 இல் இவருக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தால் “கலைத்தென்றல்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர்.