ஆளுமை:வதனி, ஸ்ரீதரன்

From நூலகம்
Name வதனி
Pages குமாரசுந்தரம்
Pages பாலாம்பிகை
Birth 1955.03.07
Place அளவெட்டி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வதனி, ஸ்ரீதரன் யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த கலைஞர். இவரது தந்தை குமாரசுந்தரம்; தாய் பாலாம்பிகை. இவரது தந்தை குமாரசுந்தரம் தவில் வித்துவான். இவரது தந்தை வழி பாட்டனார் சோ.பக்கிரிசாமி மாவிட்டபுரம் கந்தாசமி கோவில் ஆதீன ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் ஆவார். இவர் தங்க நாதஸ்வரம் பரிசு பெற்றவர். அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் பாடசாலைக் காலத்தில் சங்கீதப் போட்டிகளில் பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றுள்ளார்.

அளவெட்டியில் சிறந்து விளங்கிய சங்கீத ஆசிரியர்களான திருமதி மல்லிகா தனபாலசிங்கம், கமலா சிவநாதன் ஆகியோரிடமும் பொன் முத்துகுமாரு, பொன் தெய்வேந்திரம், செல்வி நாகம்மா கதிர்காமர் ஆகியோரிடமும் முறையாக சங்கீதம் கற்றார். வட இலங்கைச் சங்கீதசபை நடாத்திய பரீட்சைகளில் சித்தியடைந்து ஆசிரியர் தரப் பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளார். இசை ஆசிரியராக இவர் தனது தொழிலை தொடர்ந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயுமாவார். வதனி ஸ்ரீதரன் 1987ஆம் ஆண்டு வவுனிக்குளம் நீர்ப்பாசன விடுதியில் கீர்த்தனாலயா இசைக்கூடம் என்ற பெயரில் மன்றம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். இப்போது வெளிவட்ட வீதி அந்தணர் ஒன்றியக் கட்டடத்தில் இசை வகுப்புக்களை நடாத்தி வருகிறார்.

வதனி பிரபல மேடைப் பாடகராகவும், நாட்டிய அரங்கேற்றங்கள் பலவற்றில் பாடியும் உள்ளார். வவுனியா இந்து மாமன்றக் கீதம் உட்பட பல இசைப் பாடல்கள் இசையமைத்து பாடியுள்ளார். மேடை நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார். வவுனியா அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமிகோவில், குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் முதலான கோவில்களில் உற்சவங்களில் பாடி வருகின்றார். சாயி சமித்தி முதலான சமய நிறுவனங்களோடு இணைந்து பஜனைப் பாடல்களையும் பாடி வருகின்றார். வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் அறநெறிப் பாடசாலை ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.

விருதுகள்

இசைக்குயில் வவுனியா இந்துமாமன்றம் – 2003

சங்கீத ரத்னா வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி 2010

கலைஒளி வவுனியா பிரதேச செயலகம்

சங்கீதசிரோமணி கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் மணிவிழாக் குழு 2013.

கலாபூஷணம் கலாசார அலுவல்கள் அமைச்சு

இசைக் கலை வித்தகி என்னும் கௌரவ பட்டம்.

குறிப்பு : மேற்படி பதிவு வதனி, ஸ்ரீதரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.