ஆளுமை:வசந்தன், பாலசுந்தரம்

From நூலகம்
Name வசந்தன்
Pages பாலசுந்தரம்
Pages -
Birth 1988.04.09
Place கிளிநொச்சி
Category நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வசந்தன், பாலசுந்தரம் (1988.04.09 -) கிளிநொச்சி, உமையாள்புரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைக்கலைஞர். இவரது தந்தை பாலசுந்தரம். இவர் ஆரம்பக்கல்வியை கிளி/ முரசுமோட்டை புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், உயர்கல்வியை கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரியிலும் கற்றார்.

2005 இல் கீர்த்தனை மற்றும் பக்திப்பாடல்களை தனிக்கச்சேரியாக செய்திருந்தார். 2003-2006 காலப்பகுதியில் விஸ்வமடு வானொலி மன்றத்தில் பாடகராகவும், கலை நிகழ்வுகளிற்கும், நடன நிகழ்வுகளிற்கும் பிண்ணி பாடகராகவும் விளங்குகிறார். இசைக்கலைக்கு தன்னாலான முயற்சியை கலைமன்றம் போன்ற பொது அமைப்பினூடாக முன்னெடுக்க வேண்டும் எனும் நோக்குடன் செயற்பட்டு வருகிறார்.


Resources

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 57-58