ஆளுமை:லலீசன், சந்திரமௌலீசன்

From நூலகம்
Name லலீசன்
Pages சந்திரமௌலீசன்
Pages நவமணி
Birth 1970.09.19
Place யாழ்ப்பாணம், நீர்வேலி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லலீசன், சந்திரமௌலீசன் (1970.10.19) யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ஆளுமை. இவரது தந்தை சந்திரமௌலீசன்; தாய் நவமணி. சரசாலை சரஸ்வதி வி்த்தியாலயம், யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் கலைமாணி, கல்வி முதுமாணி, தமிழ் முதுமாணி பட்டங்களைப் பெற்றார். இலங்கை கல்வியியலாளர் சேவையில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபராகவும் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றார்.

வலிகாகமம் கிழக்குப் பிரதேச செயலகத்தால் வெளியிடப்பட்ட செம்புலம் , நீர்வேலி கலை பண்பாட்டு மன்றத்தால் ளெியிடப்பட்ட திருநீர்வை, அச்சுவேலி கலைபண்பாட்டு மன்றத்தால் வெளியிடப்பட்ட அச்சூரமுதம் ஆகிய நூல்களின் பதிப்பாசிரியர். கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களுடன் இணைந்து பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் என்ற நூலை ளெியிட்டுள்ளார்.

விருதுகள்

முத்தமிழ் விரகர்

சிவத்தமிழ்ச் சொல்லழகர்

செந்தமிழ்ச் சொல்லருவி

சைவநெறி வித்தகர்

Resources

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 110


வெளி இணைப்புக்கள்