ஆளுமை:றோமியல், மரியாம்பிள்ளை

From நூலகம்
Name றோமியல்
Pages மரியாம்பிள்ளை
Pages -
Birth 1968.07.28
Place கிளிநொச்சி
Category நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றோமியல், மரியாம்பிள்ளை (1968.07.28 -) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் தருமபுரம் கிழக்கு பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக்கலைஞர். இவரது தந்தை மரியாம்பிள்ளை. தனது பாடசாலைக் கல்வியின் பின் ஆசிரியராக பணியாற்றினார்.

இவர் கிளி/உருத்திரபுரம் பற்றிமா பாடசாலையில் 'யூலியசீசர்' நாடகத்தில் நடித்து கலைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் 'ஞானசௌந்தரி' கூத்தினையும், நூறுவரையிலான கிறிஸ்தவ, சமூக, நவீன வகை நாடகங்களையும் நடித்துள்ளர். இவர் 'பாதுகாவலன்' சஞ்சிகையின் ஊடகவியலாளராகவும், அரங்கமுறைகளுக்கான பயிற்றுவிப்பாளராகவும், வளவாளராகவும் தொழிற்பட்டவர்.

இவரது நாடகத்துறை வளர்ச்சிக்காக தருமபுரம் பரிலூக்கா தேவாலயத்தினர் 2005 இல் இடம்பெற்ற ஒளிவிழாவில் கௌரவித்து இருந்தனர். 2011 இல் 'கலை ஒளி' விருதினை பெற்றார்.

Resources

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 38-39