ஆளுமை:ரிஸ்னா, ஹலால்தீன்

From நூலகம்
Name றிஸ்னா
Pages ஹலால்தீன்
Pages நசீஹா
Birth
Place பதுளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றிஸ்னா, ஹலால்தீன் பதுளை, தியத்தலாவயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஹலால்தீன்; தாய் நசீஹா. இவர் கஹகொல்லை அல்பதுரியா முஸ்லிம் மகா வித்தியாலயம், வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம், பண்டாரவளை சேர் ராசிக் பரீத் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார். இலக்கியத் துறை, கணினித் துறைகளில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர், தகவல் தொலைத்தொடர்புத் தொழில் நுட்பத்தில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து டிப்ளோமாப் பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாக் கற்கைநெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

இவர் 2004 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறை ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது முதலாவது ஆக்கமான 'காத்திருப்பு' மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் இடம்பெற்றதிலிருந்து சுமாராக 300 கவிதைகளையும் 30 சிறுகதைகளையும் 50 விமர்சனங்களையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர் ஒளி, நமது தூது, நவமணி, விடிவெள்ளி, எங்கள் தேசம், ஜனனி, ஓசை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், நிறைவு, நிஷ்டை, அல் ஹஸனாத், அல்லஜ்னா, ஞானம், நீங்களும் எழுதலாம், வேகம், இருக்கிறம், பேனா, இனிய நந்தவனம் (இந்திய சஞ்சிகை) ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.

இவர் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதை நூலையும் வைகறை, காக்கா குளிப்பு, மரத்தில் முள்ளங்கி, வீட்டிற்குள் வெளிச்சம், இதோ! பஞ்சுக் காய்கள் ஆகிய சிறுவர் கதைகளையும் திறந்த கதவுக்குள் தெரிந்தவை - ஒரு பார்வை என்ற விமர்சன நூலையும் நட்சத்திரம் என்ற சிறுவர் பாடலையும் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 5626 பக்கங்கள் 24