ஆளுமை:ராஹிலா, ஹலாம்

From நூலகம்
Name ராஹிலா
Pages அமூன்
Pages உம்முல் ஹிதாயா
Birth
Place கொழும்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஹிலா, ஹலாம் கொழும்பு வாழைத்தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.. இவரது தந்தை அமூன்; தாய் உம்முல் ஹிதாயா. ஆஷிகா என்ற புனை பெயரில் பல ஆக்கங்களை எழுதியுள்ளார். ஆரம்பக் கல்வியை கொழும்பு மஹிந்து மாவத்தை முஸ்லிம் மகாவித்தியாலயத்தையும் இடைநிலை உயர் கல்வியை கொழும்பு அல் ஹிதாபா மகா வித்தியாலயத்திலும் கற்றார். Mass Media Institute of Ceylon என்ற தனியார் நிறுவனத்தில் ஊடகப் பயிற்சியினை மேற்கொண்டு முதல் தர சான்றிதழையும் பெற்றுள்ளார். தற்பொழுது ரூபவாஹினி நிகழ்ச்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.

1997ஆம் ஆண்டு முதல் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரைகளை எழுதும் திறமைக் கொண்டவர். இவரின் முதல் ஆக்கம் வீரகேசரி பத்திரிகையின் சிறுவர் பகுதியில் பாவம் பாட்டி என்ற தலைப்பில் கவிதையாக பிரசுரமானது.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு பிரதிகள் எழுதி குரல் கொடுத்தள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகியவற்றை ஆஷிகா – கொழும்பு என்ற புனைபெயரில் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவரின் ஆக்கங்கள் தினகரன், தினக்குரல், தினமுரசு, வீரகேசரி, நவமணி, மித்திரன், தமிழ் மிரர், விடிவெள்ளி போன்ற பத்திரிகைகளிலும் பயிர்நிலம், சிறகுகள், பூங்காவனம், பேனா போன்ற சஞ்சிகைகளிலும் சில இணைய பக்கங்களிலும் வெளிவந்துள்ளன.

வெளி இணைப்புக்கள்