ஆளுமை:ராஜரத்தினம், வெங்கடாசலம்
Name | ராஜரத்தினம் |
Pages | வெங்கடாசலம் |
Pages | நாகம்மா |
Birth | 1931.04.13 |
Pages | 1990.12.26 |
Place | மல்லாகம் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ராஜரத்தினம், வெங்கடாசலம் (1931.04.13 - 1990.12.26) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை வெங்கடாசலம்; தாய் நாகம்மா. இவர் ஆரம்பக் கல்வியைச் சுன்னாகம் மயிலணிப் பாடசாலையிலும் மேல் வகுப்புக்களைத் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் இந்தியா சென்று கேரள மாநிலத்தில் கதகளி நாட்டியத்தைக் குரு கோபிநாதிடமும் பரதக்கலையைத் தமிழ் நாட்டில் ராமசாமியிடமும் கற்றுக் கொண்டார்.
இவர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் முழு நேர நடன ஆசிரியராகவும் மல்லாகம் மகா வித்தியாலயம், அளவெட்டி அருணோதயாக் கல்லூரி, ஏழாலை மகா வித்தியாலயம், கீரிமலை நகுலேஸ்வராக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பகுதி நேர நடன ஆசிரியராகவும் கடமையாற்றி வந்தார்.
இவரது நாட்டியக் கலையின் சேவையைப் பாராட்டி அளவெட்டி ஶ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானத்தினர் அருட்கவி சீ.வீனாசித்தம்பியால் நாட்டியகேசரி பட்டமும் ஈழத்தின் கலாரசிகர்களால் நாட்டியக் கலாரத்தினம் என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளன.
Resources
- நூலக எண்: 7474 பக்கங்கள் 110-112