ஆளுமை:ராஜன், துரைராஜசிங்கம்
From நூலகம்
Name | ராஜன் |
Pages | துரைராஜசிங்கம் |
Birth | 1960.08.28 |
Place | நல்லூர் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ராஜன், துரைராஜசிங்கம் (1960.08.28 - ) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்கக் கலைஞர். இவரது தந்தை துரைராஜசிங்கம். இவர் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரை கல்வி கற்று மிருதங்கம், புல்லாங்குழல், ஏனைய தாள வாத்தியங்களை வாசிப்பதில் வல்லவராக விளங்குகின்றார்.
இவரது மிருதங்கக் கச்சேரி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பல தடவைகள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டம், வன்னி, கிழக்கு மாகாணம் உட்படத் தமிழர்கள் வாழும் இடங்களில் தனது மிருதங்க இசையை ஆற்றுகைப்படுத்தியுள்ள இவர், நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ கால இசை நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்துள்ளார். மேலும் வட இலங்கைச் சங்கீத சபையினர் நடத்திவரும் பரீட்சையில் சித்தியெய்தி கலாவித்தகர் என்னும் பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 7571 பக்கங்கள் 133