ஆளுமை:ரம்ஸியா

From நூலகம்
Name ரிம்ஸியா
Birth
Place களுத்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ரம்ஸியா களுத்துறை மாவட்டத்தின் பிரதேச சபைக்குட்பட்ட தர்கா நகர் மீரிப்பன்னையில் பிறந்த எழுத்தாளர். மீரிப்பன்னை ரம்ஸியா என்னும் புனைபெயரில் இலக்கிய உலகிற்கு பரீட்சயமானவர். களுத்துறை அளுத்கமை வீதி முஸ்லிம் மகளிர் தேசிய கல்லூரியில் உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி கற்றார். சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறுவர் பாடல், மெல்லிசைப் பாடல், நாடகம் என பல்வேறு துறைகளிலும் இவர் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் ஆக்கங்கள் வானொலி மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இலக்கிய உலகிற்கு இரண்டு நூல்களைத் தந்துள்ளார். இந்தப் பௌர்ணமியில் என்னும் தலைப்பிலான நூலையும் வெளியிட்டுள்ளார்.