ஆளுமை:ரனீஸா, அயூப்

From நூலகம்
Name ரனீஸா
Pages மொஹமட் அப்துல் காதர்
Pages பாத்திமா
Birth
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரனீஸா, அயூப் யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மொஹமட் அப்துல் காதர்; தாய் பாத்திமா. சிறுவயதில் இருந்தே எழுத்துத் துறைக்குள் பிரவேசித்துள்ளார். 1970ஆம் ஆண்டு விவசாயத் திணைக்களத்தின் கண்டி கன்னொருவையிலுள்ள விவசாய ஆராய்ச்சி நிலைய விவசாய தகவல் புத்தகத்தில் ஆரம்பகாலத்தில் இவரின் பிரசுரமாகின. இதனைத் தொடர்ந்து ஏந்தல் நபியின் ஏவல்கள் என்ற நூலை முதல் முறையாக வெளியிட்டார். இந்நூலை மில்க்வைற் தொழிலதிபர் காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்கள் அதிகளவு வாங்கி மில்க் வைற் சோப்புடன் இலவசமாக மக்களுக்கு வழங்கினார். அதன் பின்னர் விவசாய வினாவிடை என்ற நூல் 1981ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 1982ஆம் ஆண்டு கோழி வளர்ப்பு, யாழ் சமையற்கலை 100, மனைப்பொருளியல், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்திற்குரிய மனைப் பொருளியல் வினா விடை, இஸ்லாமிய வினா விடை ஆகிய நூல்களையும் சித்திரக் கலை, அழகியற்கலை, தையற்கலை, எம்ரொய்டரி சைனிஸ் புத்தகம் போன்ற நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் பிரிவு வெளியீடான புதுமைப் பெண் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் ரனீஸா இருந்துள்ளார். புதுமைப் பெண் பத்திரிகையில் பல புதுமைகளை புகுத்தி சிறந்த முறையில் பல இதழ்களையும் வெளியிட்டார். பூவையர் பூங்கா என்ற மாதாந்த பத்திரிகையும் வெளியிட்டார். ஸ்கிரீன் பிரின்டிங் என்ற கலையைக் கற்ற இவர் பல வருடங்களாக அதனையும் பெண்களுக்கு கற்றுக்கொடுப்பது மட்டுமல்லாது பேச்சாற்றல் முறையை மாணவர்களுக்கு போதித்தும் வருகிறார்.