ஆளுமை:யோகநாதன், கந்தசாமி

From நூலகம்
Name யோகநாதன்
Pages கந்தசாமி
Birth 1947.10.21
Place யாழ்ப்பாணம் கைதடி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகநாதன், கந்தசாமி (1947.10.21) யாழ்ப்பாணம் கைதடியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தசாமி; சாருமதி என்னும் புனைபெயரில் அறியப்படுகிறார். முற்போக்கு இலக்கிய அணியைச் சார்ந்த இவர் சீன கம்யூனிஸ் இயக்கங்கங்ளோடு தன்னையும் பிணைத்துக் கொண்டு செயற்பட்டவர்தான் இந்தச் சாருமதி.

யாழில் மு.கார்த்திகேசன், தெற்கில் நா.சண்முகதாஸ் ஆகியோரின் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட இவர் 1960ஆம் ஆண்டு கிழக்கில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினார். பல தொழிற்சங்கச் செயற்பாடுகளில் கிழக்கில் சாருமதி ஈடுபட்டுள்ளார். இவரின் அறியப்படாத மூங்கில் சோலை என்ற கவிதை நூலை நந்தலாலா இலக்கிய வட்டம் வெளிக் கொண்டுவந்தது.

படைப்புகள்

Resources

  • நூலக எண்: 14918 பக்கங்கள் 26-31
  • நூலக எண்: 445 பக்கங்கள் 19
  • நூலக எண்: 444 பக்கங்கள் 3
  • நூலக எண்: 498 பக்கங்கள் 22
  • நூலக எண்: 694 பக்கங்கள் 37