ஆளுமை:யுவனேஸ்வரி, தர்மரட்னம்

From நூலகம்
Name யுவனேஸ்வரி
Pages அருள்பிரகாசம்
Pages மனோன்மணி
Birth 1956.03.05
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யுவனேஸ்வரி, தர்மரட்னம் (1956.03.05) யாழ்ப்பாணம், கருகம்பனையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அருள்பிரகாசம்; தாய் மனோன்மணி. புனைபெயர் ஊர்வசி. ஆரம்ப கல்வியை கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயத்திலும் இடைநிலை. உயர்நிலைக் கல்வியை தெல்லிப்பளை மகஜனா கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌதிக விஞ்ஞான பட்டம் பெற்றவர். மட்டக்களப்பு தேசியக் கல்வியியல் கல்லூரியின் இணைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் எழுச்சியான ஈழப் பெண்ணியவாதக் கவிதைகளை எழுதியுள்ளார். 1970ஆம் ஆண்டு பிற்பகுதியில் மகஜனா கல்லூரியின் சிறுகதைத் தொகுதியில் ஊர்வசியின் சிறுகதையொன்றும் இடம்பெற்றது. இவே இவரின் இலக்கிய ஈடு்பாட்டின் அடிப்படை களமாக அமைந்துள்ளதெனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர் ஊர்வசி. 1982-1985ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் புதுசு, அலை, சக்தி ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. 1980ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்களின் எழுச்சிக்கு ஊர்வசியின் கவிதை ஓர் உந்து சக்தியாக அமைந்ததென விமர்சகர்களால் கருத்து முன்வைக்கப்படுகிறது. “இன்னும் வராத சேதி” என்னும் ஊர்வசியின் கவிதைகள் அடங்கிய நூலை தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கீதா சுகுமாரன் தொகுத்து வெளியிட்டுள்ளமையை நன்றியுடன் நினைவுகூருகிறார் எழுத்தாளர் ஊர்வசி. இருந்த போதிலும் ஊர்வசி தனது பேனாமுனைக்கு தற்பொழுது ஓய்வு கொடுத்துள்ளமை தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு என்பதில் மறுப்பதற்கில்லை.

குறிப்பு : மேற்படி பதிவு யுவனேஸ்வரி, தர்மரட்னம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

Resources

  • நூலக எண்: 16 பக்கங்கள் 37-40
  • நூலக எண்: 447 பக்கங்கள் 2
  • நூலக எண்: 989 பக்கங்கள் 439
  • நூலக எண்: 842 பக்கங்கள் 16