ஆளுமை:மொஹம்மது நிசார், ஹாமிது லெப்பே

From நூலகம்
Name மொஹம்மது நிசார்
Pages ஹாமிது லெப்பே
Pages ஹவ்வா உம்மா
Birth 1948.05.25
Place உடுநுவரை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹம்மது நிசார், ஹாமிது லெப்பே (1948.05.25 - ) கண்டி, உடுநுவரையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஹாமிது லெப்பே; தாய் ஹவ்வா உம்மா. இவர் உடுநுவரை டி. பி. விஜயதுங்க தேசிய பாடசாலை, கம்பளை சாஹிரா தேசிய பாடசாலை, கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று இலக்கியத் துறையில் ஆர்வமிக்கவராகக் காணப்பட்டார்.

இவரின் கன்னியாக்கமான “உலக சாதனை” 1979 ஆம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானதிலிருந்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள், சிறுவர் கதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினக்குரல், சுடரொளி, நவமணி, தினபதி, சிந்தாமணி போன்ற தேசியப் பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் பிரசுரமானதுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சில நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன.

இவர் கனவுப் பூக்கள், ஓயாத அலைகள், நட்சத்திரப் பூக்கள், வெந்நிலா, மலரும் மொட்டுக்கள், சிறகு விரி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு 2008 ஆம் ஆண்டு 'கலாபூஷணம்' விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

Resources

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 146-148

வெளி இணைப்புக்கள்