ஆளுமை:மேரி தஸ் நெவிஸ் லடிஸ்லாஸ்

From நூலகம்
Name மேரி தஸ் நெவிஸ் லடிஸ்லாஸ்
Pages லடிஸ்லாஸ், பிலிப்பு
Pages பிலோமினா
Birth -
Pages -
Place வடமராட்சி
Category அருட்சகோதரி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மேரி தஸ் நெவிஸ் லடிஸ்லாஸ் யாழ்ப்பாணம், வடமராட்சி, செம்பியன்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட அருட்சகோதரி. இவரது தந்தை லடிஸ்லாஸ், பிலிப்பு; தாய் பிலோமினா. யாழ் செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், யாழ் செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, யாழ் பாசையூர் சென் அன்ரனீஸ் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைமாணி, முதுதத்துவமாணி ஆகிய பட்டங்ளையும், கல்வி டிப்ளோமாவை தேசிய கல்வி நிறுவகத்திலும், திருவிவிலிய டிப்ளோமாவை திண்டிவனம் லாமன் கல்வி நிறுவனத்திலும், உளவியல் டிப்ளோமாவை I.C.O.F.நிறுவனத்திலும் பெற்றுள்ளார்.

திருக்குடும்ப கன்னியர் மடத்தினில் தன்னை இணைத்து துறவியான இவர் தனது முதல் அர்ப்பணத்தினை 1972.03.06 இலும் நித்திய அர்ப்பணத்தினை 1980.02.23இலும் பெற்றார். மேலும் கிளி/ புலோப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, கிளி/ பளை மகா வித்தியாலயம், யாழ் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயம், யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகவும், யாழ் புனித அன்னாள் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 53836 பக்கங்கள் 15