ஆளுமை:மேரி அன்ரலின் ஜெறோஜ், சந்தான்

From நூலகம்
Name மேரி அன்ரலின் ஜெறோஸ்
Pages சவரிமுத்து
Pages அற்புதம்
Birth
Place மாவிலங்கேணி முருங்கன்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மேரி அன்ரலின் ஜெறோஜ், சந்தான் மன்னார் மாவட்டம் மாவிலங்கேணி முருங்கன் உயிலங்குளத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சவரிமுத்து; தாய் அற்புதம். இவரின் கணவர் ஓய்வுபெற்ற கிராம அலுவலர் அமரர் சிமியோன் சந்தான் ஆவார். இவர் முருங்கன் ஜெயாபாலாஜி எனும் புனை பெயரிலேயே தனது ஆக்கங்களை எழுதி வருகிறார்.

பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். 1970ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவரின் ஆக்கங்கள் சிரித்திரன், வித்தியாரம் மஞ்சரி ஆகிய பத்திரிகையிலும் தூண்டில், மல்லிகை ஆகிய சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளன. 1980-1984ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவரின் கணவரின் சிறைவாசம் இவரை தீவிர எழுத்தாளராக எழுதத் தூண்டியதாகத் தெரிவிக்கின்றார் எழுத்தாளர்.

கவிதை, சிறுகதை, ஆய்வு விமர்சனம் எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர். இலங்கை வானொலி, வீரகேசரி, தினக்குரல், பாதுகாவலன் ஆகியவற்றிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலியில் பாட்டும்பதமும், இன்றைய நேயர் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளதுடன் நாடகங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளார். மன்னார் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினராக இருக்கிறார். அத்தோடு பல சமூக சேவை அமைப்புக்களுடனும் இணைந்து சமூக பணியாற்றி வருகிறார். தலைப்பிரசவம் எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

செழுங்கலை வித்தகர் விருது நானாட்டான் பிரதேச செயலகம் வழங்கியது – 2019ஆம் ஆண்டு.


Resources

  • நூலக எண்: 860 பக்கங்கள் 28

வெளி இணைப்புக்கள்