ஆளுமை:மெற்றாஸ் மயில், செல்லையா

From நூலகம்
Name மெற்றாஸ் மயில்
Pages செல்லையா
Birth 1945
Pages 2010.02.09
Place முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மெற்றாஸ்மயில், செல்லையா ( 1945 - 2010.02.09) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லையா. இவர் புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி கற்றுச் சித்தியடைந்த பின்னர் யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் உயர்தரம் படித்து, கொழும்புப் பல்கலைக்கழகம் சென்றார். இவர் யாழ்ப்பாணம், தீவகம் ஆகிய கல்வி வலயங்களில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றிப் பின்னர் கிளிநொச்சி கல்வி வலயத்தில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றினார்.

நாட்டுக்கூத்துக் கலைஞனாக விளங்கிய இவர், இசை நாடகக் கலையைப் பயில வேண்டும் என்ற ஆவலில் 1997 ஆம் ஆண்டு இசை நாடகத்தை மூத்த கலைஞர்களிடையே பயின்று "சத்தியவான் சாவித்திரி" இசை நாடகத்தில் சத்தியவானாக நடித்ததோடு நாட்டார் பாடல்களில் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான வன்னிப் பகுதி நாட்டார் பாடல்களைத் தொகுத்து 1980 ஆம் ஆண்டு "வன்னி வள நாட்டார் பாடல்" என்னும் நூலை வெளியிட்டார். இவற்றுடன் வன்னி வள நாட்டார் பாடல் (1981), ஆனையை அடக்கிய அரியாத்தை (1993), இசை நாடக மூத்த கலைஞர் வரலாறு (1999), மண் வாசனையில் மூன்று நாடகங்கள் (2000), மரபு வழி இசை நாடகங்கள் ஒன்பது (2001) ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 26-28

வெளி இணைப்புக்கள்

செ. மெற்றாஸ் மயில் பற்றி மடத்துவாசல் வலைத்தளத்தில்