ஆளுமை:முருகானந்தம், நல்லரசு

From நூலகம்
Name முருகானந்தம்
Pages நல்லரசு
Birth 1944.08.16
Place நல்லூர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகானந்தம், நல்லரசு (1944.08.16 - ) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தவிற் கலைஞர். இவரது தந்தை நல்லரசு. இவர் பாடசாலைப் படிப்பை எட்டாம் ஆண்டுடன் இடை நிறுத்தித் தவில் இசையைப் பயில ஆரம்பித்தார். இவர் ஆரம்பத் தவிற் கலையைத் தந்தையிடம் கற்றறிந்ததோடு தவில் வித்துவான் சின்னப்பழனியிடம் தவில் வாசிப்பின் நுணுக்கங்களை முறையாகப் பயிற்சி பெற்று, வாழ்வியலுக்கான தொழிலாகப் பரம்பரை வழியாக மேற்கொண்டு வந்தார்.

இவர் யாழ். மாவட்டத்திலுள்ள பல பிரசித்தி பெற்ற ஆலயங்களில் உற்சவ காலங்களின் போதும் மங்கள விழாக்களின் போதும் கலை நிகழ்ச்சிகளிலும் தவிற் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு இவரது கலைப்பணியைப் பாராட்டி நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை 2002 ஆம் ஆண்டு கலைஞானச்சுடர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 102
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 99