ஆளுமை:முருகானந்தம், இராமமூர்த்தி

From நூலகம்
Name முருகானந்தம்
Pages இராமமூர்த்தி
Birth 1953.07.27
Place கோண்டாவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகானந்தம், இராமமூர்த்தி (1953.07.27 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை இராமமூர்த்தி. தவில் வித்துவான்களான கோபாலகிருஷ்ணன், ஆறுமுகம், சின்னராஜா ஆகியோரிடம் தவிற் கலை நுட்பங்களை முறையாகக் கற்றுத்தேறிய இவர், அனுபவம் மிக்க தவிற் கலைஞராக விளங்கினார்.

இவர் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இக்கலைத்துறையில் பணியாற்றுவதுடன் இலங்கையின் பல பாகங்களிலும் சுவிஸ், ஜேர்மனி, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் தனது தவிற் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு காரைநகர் சிவன்கோவில் தேவஸ்தானத்தினர் தவில் லய ஜதிவேத வித்துவமணி என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளதோடு கோண்டாவில் காளிகோவில் தேவஸ்தான சபையைச் சேர்ந்த பிரான்ஸ் வாழ் அன்பர்கள் லலிதலய தவில் வித்துவமணி என்ற பட்டத்தையும் சூட்டிப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளனர்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 126
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 99