ஆளுமை:முத்தையா, தெய்வேந்திரன்

From நூலகம்
Name முத்தையா
Pages தெய்வேந்திரன்
Pages வள்ளிப்பேத்தி
Birth 1955.10.01
Pages -
Place கல்லடி, வெருகல், திருகோணமலை
Category வேடப்பாட்டுக்காரர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்தையா தெய்வேந்திரன் (1955.10.01) கல்லடி, வெருகல், திருகோணமலையைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த திறமான கப்புறாளை மற்றும் வேடப்பாட்டுக்காரர் ஆவார். இவரது தந்தை முத்தையா,தாய் வள்ளிப்பேத்தி. இவரது மனைவி மாணிக்கம். இவருக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர். இவர் தரம் இரண்டு வரைக்கும் வாழைத்தோட்டம் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். இவரது தந்தையார் சிறந்த வேட மதகுருவாகக் காணப்பட்டுள்ளார். அதன் வழித்தோன்றலாக தற்காலத்தில் வாழும் தலைமுறையினரிடையே பல கிராமங்களுக்கும் வழிபாட்டினை மேற்கொள்ளச் செல்கின்ற பிரதான கப்புறாளையாக இவர் காணப்படுகின்றார். இவரது தொழில் நடவடிக்கையாக தேனெடுத்தல், மீன்பிடி மற்றும் சேனைப்பயிர்ச்செய்கை என்பன காணப்படுகின்றன. இவர் தான் வாழும் நிலப்பரப்பில் “வேடப்பாட்டுக்காரர் “ எனும் தொணியுடன் அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இவர் நாட்டு மருத்துவம், கைமருத்துவம், விலங்கு மருத்துவம் முதலான இயற்கை மருத்த முறைகளிலும் கைதேர்ந்தவராகக் காணப்படுகின்றார். இன்றைய வெருகல் பிரதேசத்தில் வேடர் மரபில் வந்ததும், வேடர் மொழியினை நன்கு வாலாயப்படுத்திக் கொண்ட ஒருவராக இவர் காணப்படுகின்றார். தன்னை நாடி வரும் நோய்நீக்கல் செயற்பாடுகள் எதற்கும் எதுவித சன்மானமும் வாங்காத தனது மூதாதையர்கள் விட்டுச்சென்ற நல் நெறியைக் கடைப்பிடிப்பவராகவும் இவர் காணப்படுகின்றார்.