ஆளுமை:முத்துலட்சுமி கோபால்

From நூலகம்
Name முத்துலட்சுமி கோபால்
Birth 1942
Place நெல்லியடி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துலட்சுமி கோபால் (1942-) யாழ்ப்பாணம், நெல்லியடியைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவர் ஆரம்பக் கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியில் பயின்றார். இவரது முதல் நாதஸ்வரக் குரு பெரியசாமி என்பவராவார். இவர் யாழ்ப்பாணக் குடாநாட்டின் முதலாவது பெண் நாதஸ்வரக் கலைஞராகக் கருதப்படுகின்றார்.

இவர் பன்னிரெண்டாவது வயதில் நல்லூர் சட்டநாதர் ஆலயத்தில் தனது முதலாவது இசைக் கச்சேரியை அரங்கேற்றினார். ஆரம்பத்தில் தந்தையாருடன் உதவி நாதஸ்வரம் வாசித்து வந்த இவர், இசைக் கச்சேரிகளை மேலும் தொடரும் முகமாகக் கல்வியங்காட்டில் நிரந்தரமாக வசித்து வந்தார். ஆண்களே பெரும்பாலும் நாதஸ்வரம் வாசிக்கும் சூழலில் பெண்களாலும் சிறப்பாக வாசிக்க முடியும் என்பதை வெளிப்படுத்திய இப்பெண், ஆலய விழாக்களில் தனது நாதஸ்வர இசைக் கச்சேரிகளை நடத்திப் பல ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

இவரது நாதஸ்வர இசைத் திறமையைப் பாராட்டி நல்லூர் பால கதிர்காம பிரதம குருக்கள் நாதஸ்வர கானவித்தகி என்ற பட்டத்தையும் நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கலாச்சார விழாவில் கலைஞானச்சுடர் விருதையும் வழங்கிக் கௌரவித்தது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 97