ஆளுமை:முத்துமீரான், எஸ்.

From நூலகம்
Name முத்துமீரான்
Birth 1941.05.03
Place அம்பாறை
Category கவிஞர், சட்டத்தரணி, எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துமீரான், எஸ். (1941.05.03 - ) அம்பாறையைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், சட்டத்தரணி, நிருபர் (தினகரன், வீரகேசரிப் பத்திரிகை). இவர் சிறுகதைகள், கவிதைகள், உருவகக் கதைகள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பாடல்கள் என்பனவற்றை நிந்தவூரான், நிந்தன், லத்தீபா முத்துமீரான் போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார்.

நாட்டாரியல் ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்ட இவர், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள், இலங்கைக் கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள், இலங்கைக் கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள், இலங்கைக் கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள், கிழக்கிலங்கைக் கிராமத்து முஸ்லிம்களின் பூர்வீகமும் – வாழ்வும்- வாழ்வாதாரங்களும் முதலான ஆய்வு நுல்களை எழுதியுள்ளார்.

இவரது ஆளுமைக்காகவும் இலக்கியச் சேவைக்காகவும் தமிழ்மாமணி, இலக்கியத்திலகம், கலைக்குரிசில், கலாபூஷணம், தாஜுல் அதிப் விருது, சாகித்திய மண்டலப் பரிசு ஆகியவற்றைப் பெற்றார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 67-69
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 171-174
  • நூலக எண்: 6572 பக்கங்கள் 77-82
  • நூலக எண்: 1649 பக்கங்கள் 05-07