ஆளுமை:முத்துக்குமார், பொன்னுத்துரை

From நூலகம்
Name முத்துக்குமார்
Pages பொன்னுத்துரை
Birth 1920.05.05
Place பொன்னாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமார், பொன்னுத்துரை (1920.05.05 - ) யாழ்ப்பாணம், பொன்னாலை, சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னுத்துரை. இவர் 1950 இலிருந்து கலைத்துறையில் பிரவேசித்ததுடன் தமிழ் மரபு, சைவ சமயப் பாடத்திரட்டு, மாணவர் கட்டுரைகள், செந்தமிழ்த் தேன், இன்பத் தமிழ், தமிழ் இலக்கியம், சிலம்பின் சிறப்பு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மேலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கம்பராமாயண வகுப்புக்களையும் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் சிலப்பதிகார வகுப்புக்களையும் நடத்தியுள்ளார்.

இவர் 1956 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற முதலாவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியதோடு, 1964 - 1967 ஆம் ஆண்டு வரை இலங்கைக் கம்பன் கழகத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். இவரது சேவைக்காகச் சாகித்திய மண்டல இலக்கிய விருது கிடைத்துள்ளது.


Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 44