ஆளுமை:முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன்

From நூலகம்
Name இராதாகிருஷ்ணன்
Pages முத்துகுமாரு
Birth 1963.06.23
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராதாகிருஷ்ணன், முத்துக்குமாரு (1963.06.23) யாழ்ப்பாணம் கோப்பாயை வசிப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை முத்துகுமாரு; சிறுகதையாளர், ஓவியர், நாடகவியாளர், கல்வியியலாளர், உளவளவாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட ஆளுமை.

புவியியல் ஆசிரியரான இவர் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் ஆரம்பக் கல்வி, உதவிக் கல்வி பணிப்பாளராகவும் கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமைபுரிகிறார். கோபாலி என்ற புனை பெயரில் ஓவியங்களை வரைந்து நவீன ஓவியராகப் புகழ் பெற்றவர். இவரது ஓவியங்கள் ஈழத்துச் சஞ்சிகைகளிலும், தமிழகத்துச் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. சிறுகதைத் தொகுப்பு நூல்கள், நாடக எழுத்துரு நூல்கள், கல்வியியல் நூல்கள், சிறுகதை இலக்கிய நூல்கள் என பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் கட்டுரைகள் பல சஞ்சிகைகளிலும், காலஞ்சுவடு, கணையாளி, தாமரை, சரிநிகர், அகவிழி ஆகியவற்றிலும் வெளிவந்துள்ளன.

மண்சுமந்த மேனியர் என்ற ஈழத்தின் புகழ் பெற்ற நாடகத்தின் ஊடாக நாடகத்துறைக்குள் நுழைந்த இவர் பல நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். சிறுவர் அரங்க செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது மானிடச் சிக்கல் என்ற நாடக நூல் 1998ஆம் ஆண்டு சிறுவர் அரங்கு என்ற நூல் 2002ஆம் ஆண்டிலும், தேசிய சாகித்தியப் பரிசில்களைப் பெற்றுள்ளது. உதிரவேர்கள் என்ற சிறுகதைத் தொகுதியையும் உள்ளொளிபெருக்கும் அரங்கு என்ற நாடக நூலும், பரிகார கற்பித்தலுக்கான அரங்க செயற்பாடு என்ற கல்வியியல் நூலும் கிழக்கு மாகாண சாகித்திய பரிசை பெற்றுள்ளது. உள்மனச்சித்திரம் என்ற சிறுகதை நூல் 2014ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான வட மாகாணத்தில் பெற்றது.தரம் 7 தமிழ்மொழியும் இலக்கியமும் என்ற பாடநூலில் இவரது சிறுகதை ஒன்று மாணவர்களுக்கான பாடமாகப் பயன்பட்டு வருகின்றது.

Resources

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 9-10
  • நூலக எண்: 8786 பக்கங்கள் 42-27