ஆளுமை:முகம்மது முகைதீன்,அகமது லெவ்வை

From நூலகம்
Name முகம்மது முகைதீன்
Pages அகமது லெவ்வை
Pages மரியங்கண்டு
Birth 1920.08.20
Place சாய்ந்தமருது
Category நிர்வாகத்துறை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது முகைதீன்,அகமது லெவ்வை (1920.08.20-) சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு நிர்வாகத் துறை ஆளுமையாவார். இவர் இஸ்மாலெவ்வை அகமதுலெவ்வை மற்றும் அபூபக்கர்லெவ்வை மரியங்கண்டு தம்பதிகளின் 5 வது புதல்வராவார். ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது ஆண்கள் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை காரைதீவு இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயத்திலும் கற்று S.S.C. சித்தியடைந்து 01 02-1947இல் BT / காங்கேயன் ஓடை அரசினர் T.B.S இல் உதவி ஆசிரியராக நியமனம் பெற்று 31-01-1948 வரை கடமையாற்றினார் .

01-02-1948இல் இருந்து 31-07 1950 வரை அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார் . சாய்ந்தமருதின் பயிற்றப்பட்ட முதலாவது ஆசிரியர் என்ற பெருமை இவரையே சாரும் . 9 வருடங்கள் 5 மாதங்கள் ஆசிரியராகவும் 22 வருடங்கள் 1 மாதம் தலைமை ஆசிரியராகவும் பல பாடசாலைகளில் சிறப்பாக சேவையாற்றினார் . 01-07-1956 முதல் 31 12-1962 வரை தலைமை ஆசிரியராக இருந்து A / கனந்தற கட்டுக் கெலியாவ பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தினார் . அவ்வூரில் ஒரு பள்ளிவாசல் உருவாக்குவதிலும் முன்னின்று பாடுபட்டார் . 01-01-1962 தொடக்கம் 28 02-1973 வரை சாய்ந்தமருது G.M.B.S. பாடசாலையில் தலைமை ஆசிரியராக இருந்து பாடசாலை அபிவிருத்தி , கல்வி அபிவிருத்தி போன்றவற்றில் ஆகக் கூடிய கவனம் செலுத்தி பல கல்விமான்கள் உருவாகுவதற்கு களமமைத்தமை பாராட்டுக்குரியது . 01-03 19-08-1978 ஓய்வுபெறும் வரை 1973 இல் 3 ஆம் தர அதிபரானார் . 01-03-1973 - ஒலுவில் அல் - ஹம்றாம . வித்தியாலயத்தில் அரும் பணியாற்றினார்.