ஆளுமை:முகம்மட் றிபாஸ், அப்துல் லத்தீப்

From நூலகம்
Name அப்துல் லத்தீப் முகம்மட் றிபாஸ்
Pages அப்துல் லத்தீப்
Pages மதீனா உம்மா
Birth 1976.06.09
Place மருதமுனை , அம்பாறை
Category கவிஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அப்துல் லத்தீப் முகம்மட் றிபாஸ் (பி.1976.06.09) அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தினைச் சேர்ந்த கவிஞராவார். இவர் 1976ம் ஆண்டு அலியார் அப்துல் லத்தீப் மற்றும் மதீனா உம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை அல் – ஹம்றா பாடசாலையிலும் உயர்கல்வியை ஸம்ஸ் மத்திய கல்லூரியிலும் பயின்றார். 1995ம் ஆண்டு கொழும்பு சட்டபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அங்கு சட்டமாணி பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

அதனை விட தேசிய சுகாதாரம் தொடர்பான டிப்ளோமா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உளவளத்துணை டிப்ளோமா மற்றும் ஊடக கற்றை நெறி டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமை தொடர்பான டிப்ளோமா போன்றன பூர்த்தி செய்துள்ளார். இவர் 1990ம் ஆண்டு மித்திரன் தேசிய பத்திரிகையில் எழுதத்தொடங்கினார். இவரது முதலாவது கவிதை விரக்தியின் விழிம்பு ஆகும்.

இவரது ஆக்கங்கள் தினகரன், சரிநகர், வீரகேசரி, செந்தூரம் போன்ற பத்திரிகைகளிலும் காலச்சுவடு மற்றும் வியூகம், மறுகா போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவர் பெரும்பாலும் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதிலே அதிக நாட்டம் கொண்டவர்.

இவரது முதலாவது கவிதை வெளியீடு 2005ம் ஆண்டு வெளிவந்த பூமிக்கடியில் வானம் ஆகும். அதனைத் தொடர்ந்து பறவை போல சிறகடிக்கும் கடல் (2006), எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும் (2008), மழையை மொழிதல்(2010), துளி அல்லது துகள் (2020), பெருக்கு (2022), லா (2023) போன்றனவாகும். கட்டுரை சார்ந்த வெளியீடுகளாக விலைப்பட்டியல் கொலைப்பட்டியல் மு.கா. தேசியப்பட்டியல், 9வது ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம் தேசிய அரசியலும் போன்றனவாகும். இவரது பறவை போல சிறகடிக்கும் கடல் (2006) தொகுப்புக்கு இலங்கை கிழக்கு மாகாண சாகியித்திய விருது கிடைத்தது.