ஆளுமை:மீனாம்பிகை, வள்ளிபுரம்

From நூலகம்
Name மீனாம்பிகை
Birth 1947.03.12
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீனாம்பிகை, வள்ளிபுரம் (1947.03.12) மட்டக்களப்பு மண்டூரில் பிறந்த எழுத்தாளர். இவர் மண்டூர் மீனா என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். மண்டூர் இராமகிருஸ்ணன் வித்தியாலயத்தில் கல்வி கற்றார். ஓய்வுபெற்ற ஆசியரான இவர் 35க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். 1965ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். இவரது முதலாவது புதுமை என்ற கவிதை, விதி என்ற சிறுகதை தாய்வீடு பத்திரிகையில் வெளிவந்தது. சிறுகதை, கவிதை, நாடகம் என பல்துறைகளில் திறமை கொண்டவர். ஜோதி, தினகரன், வீரகேசரி ஆகிய நாளிதழ்களிலும் கலைச்செல்வி என்ற ஆண்டு மலரிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. ”திருப்பம்” சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.