ஆளுமை:மாற்கு

From நூலகம்
Name மாற்கு
Birth 1933
Pages 2000
Place யாழ்ப்பாணம்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாற்கு (1933 - 2000) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவர் இன்றுவரை மக்கள் மத்தியில் நிலைத்திருப்பதற்கு இவருடைய மாணவர்களின் ஓவியக் காட்சிகள் இட்ட பலமான அத்திவாரமே காரணமாகும். இவர் 1957 இல் அரசினர் கலைக்கல்லூரியில் பயிற்சியை முடித்து மங்கலவர்ண ஓவியங்கள் வரைதலிலும் கழுவுதற்பாணிச் சித்தரிப்பிலும் ஆர்வமுடையவராக விளங்கினார்.

இவரது ஓவியங்களில் 1970 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரை ரேகைச் சித்திரங்களின் பாணி மேலோங்கிக் காணப்படுகின்றது. இவரது ஓவியங்களில் சிற்பிக்குள்ளிருந்து (1968), இராப்போசனம் (1974) குறிப்பிடத்தக்கவை. இவரை இவ் ஓவியங்கள் சமகால ஓவியப் படைப்புக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. இவரது ஊடகத் தெரிவுகளும் ஓவிய வெளிப்பாடுகளும் அவரது நெஞ்சுரத்தையும் சமூக நோக்கையும் தெரிவிப்பதாக உள்ளது.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 35-37
  • நூலக எண்: 14642 பக்கங்கள் 19-23