ஆளுமை:மாணிக்கவேல், மூத்தான்

From நூலகம்
Name மாணிக்கவேல்
Pages மூத்தான்
Pages நாகமுத்து
Birth 1945.11.26
Pages -
Place அக்கரை,களுவன்கேணி, மட்டக்களப்பு
Category கூத்து அண்ணாவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


மூத்தான் மாணிக்கவேல் (1945.11.26) அக்கரை, களுவன்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த திறமான அண்ணாவி மற்றும் கூத்துக் கலைஞர். இவரது தந்தை மூத்தான்;தாய் நாகமுத்து. இவரது மனைவி ரோணிக்கம். இவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். இவர் தரம் இரண்டு வரைக்கும் களுவன்கேணி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். இவரது தந்தையார் சிறந்த வேட மதகுருவாகக் காணப்பட்டுள்ளார். மாணிக்கவேல் அவர்கள் தனது இளம் பராயம் தொடக்கம் இன்று வரைக்கும் கூத்தினை தனது உயிர் உடமையாகக் கொண்டுக் காணப்படுகிறார். ஆரம்பத்தில் கூத்தில் வேடமிட்டு ஆடும் கூத்துக்கலைஞராகக் காணப்பட்டு, பின்னைய நாள் தொடக்கம் இன்று வரைக்கும் தனது கிராமத்தின் சிறந்த அண்ணாவி முதுசமாகவும் காணப்படுகிறார். இவரால் வடமோடிக் கூத்து, தென்மோடிக் கூத்து , மகிடிக்கூத்து, புலிக்கூத்து மற்றும் ஆனந்தக்காவடி முதலான சகல கூத்தாட்ட வகைகளையும் மிகத்திறமாகப் பயிற்றுவிக்க முடியும். அவ்வகையில் தனது காலத்தில் பல கூத்துக்கலை மேடையேற்றியுள்ளார். அத்துடன் இவர் தனது கிராமம் மற்றும் சமூகம் சார்ந்த நலத்திட்ட வேலைகளிலும் ஈடுபாடு கொண்டவர். தற்போதைய தனது முதுமைக்காலத்திலும் கிராமத்தின் முதியோர் சங்கத்தின் தலைவராகவும் கடைமையாற்றி வருகிறார்.