ஆளுமை:மலர், சின்னையா

From நூலகம்
Name மலர்
Pages சின்னையா
Birth 1951.09.01
Place வரணி
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மலர், சின்னையா (1951.09.01 - ) யாழ்ப்பாணம், வரணியைப் பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் கவிஞர். இவரது தந்தை சின்னையா. இவர் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்ததோடு ஆய்வுத்துறையிலும் ஈடுபட்டார். இவரது கவிதைகள், சிறுகதைகள் இலங்கையில் வெளியாகும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

இவர் சிறுவர்களுக்கான ஆக்கங்களை எழுதுவதில் ஈடுபாடு கொண்டவர். இவர் எப்படிக் கற்போம், மழலை எழுச்சி, விழித்தெழுவோம், சிந்தனைத்துளிர்கள், மலரின் கட்டுரைகள், சுற்றாடல் கீதம் தரம் - 2, சுற்றாடல் கீதம் தரம் - 3 ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளதோடு தெய்வீக கானம், வெள்ளைப் பிள்ளையார் பாடல், பரணி ஆகிய தலைப்புகளில் ஐம்பத்திரெண்டு பாடல்கள் கொண்ட நான்கு பாடல் ஒலி நாடாக்களையும் தனது இசையமைப்புடன் வெளியிட்டுள்ளார். இந்து மதம் காட்டும் இறைவழிபாடு என்ற கட்டுரையை நல்லூர் கந்தன் வருடாந்த மலரில் வெளியிட்டுள்ளார்.

இவர் ஆரம்ப காலத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய போது “வாழ்ந்து காட்டுவோம்”, “யார்விட்ட தவறு” ஆகிய சிறுவர் நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி சிறுவர்களைக் கொண்டு மேடையேற்றியுள்ளார். பின்னர் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக இருந்த காலத்தில் ஆசிரியர் கற்பித்தலை இலகுபடுத்தி வாண்மையுடன் கற்பிப்பதற்காகவும் மாணவர்களின் இலகுமுறைக் கற்றலுக்காகவும் பல ஆக்கபூர்வமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மனிதக் குழந்தை, கற்றல் பொறிமுறையில் ஒரு ஊக்கல், மனமே என்னை மீட்டுவிடு, சுனாமியும் எதிர்காலமும், மனமே மீண்டெழுவாய், குழந்தைகளுக்குள் கிளறுங்கள் போன்ற உளவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை பின்னர் பத்திரிகைகளிலும் வெளியாகின.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 29
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 43-44