ஆளுமை:மருசலீன் சூசைநாயகம் (நாவண்ணன்)

From நூலகம்
Name மருசலீன் சூசைநாயகம் (நாவண்ணன்)
Birth 1947.03.15
Pages 2006.04.15
Place மன்னார்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மருசலீன் சூசைநாயகம் (1947.03.15 - 2006.04.15) ஓர் எழுத்தாளர். இவர் நாவண்ணன் என்னும் புனைபெயரால் அறியப்பட்டார். இவர் தனது கலைப்படைப்புகள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்குமுறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டி விட்டவர்.

இவரால் தமிழன் சிந்திய இரத்தம், புத்தளத்தில் இரத்தக் களம், கதை கண்ணீர் கவிதை (1992, கவிதைத்தொகுப்பு), தீபங்கள் எரிகின்றன, நினைவாலயம், கரும்புலி காவியம் (கவிதைத்தொகுப்பு), அக்கினிக் கரங்கள், சுனாமிச் சுவடுகள், எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன ஆகியன நூல்கள் எழுதப்பட்டன. இவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக, இவருக்கு 'மாமனிதர்' என்ற அதியுயர் தேசியவிருததை, இவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 292-303