ஆளுமை:மரியாம்பிள்ளை, செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப்

From நூலகம்
Name மரியாம்பிள்ளை
Pages செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப்
Birth 1947.02.17
Place குருநகர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மரியாம்பிள்ளை, செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப் (1947.02.17 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப். இவர் 1961 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் பூலோகம் போன யமன், ஊமைக் கண், இதயக்குமுறல் போன்ற நாடகங்களை எழுதியதோடு சாணக்கியன் சபதம், வாழ்க்கை அழைக்கிறது போன்ற நாடகங்களில் நடித்துமுள்ளார். மேலும் இவர் இரவுப்பிச்சை, இரத்தமும் இரக்கமும் முதலான சிறுகதைகளையும் இரட்டையர், கனவு பலித்தது போன்ற வேதாகம நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் மல்லிகை, ஈழநாதம், குங்குமம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.


Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 208