ஆளுமை:மயில்வாகனம், அம்பலம்
From நூலகம்
Name | மயில்வாகனம் |
Pages | அம்பலம் |
Birth | 1895 |
Pages | 1969.04.25 |
Place | ஆனைக்கோட்டை |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மயில்வாகனம், அம்பலம் (1895 - 1969.04.25) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை அம்பலம். இவர் கும்பகோணம் ராஜமாணிக்கம்பிள்ளையின் நாடகக் குழுவுடன் இணைந்து இந்தியா சென்று அவர்களின் வழிகாட்டலில் மிருதங்கம், ஆர்மோனியம், டோலக், தபேலா போன்ற வாத்தியங்களை வாசிக்கப் பயின்றதோடு மேற்படி வாத்தியங்களின் தயாரிப்பு நுட்பங்களையும் நன்கு பயின்றார்.
இவர் இந்தியக் கலைஞர்களான மதுரை ராஜப்பா, அம்பல் ராமச்சந்திரன், சுப்பராமபாகவதர், மதுரை நடராஜ ஐயர் ஆகியோருடன் இணைந்து பல கச்சேரிகளை நிகத்தியுள்ளார். இவர் ஏறக்குறைய 50 வருடங்கள் லய வாத்தியங்கள் வாசித்துள்ளார். இவருக்கு யாழ்ப்பாண நாடக அரங்கில் கோடையடி மயில்வாகனம் ன்எனும் பட்டம் விஸ்வநாததாஸினால் அளிக்கப்பட்டது.
Resources
- நூலக எண்: 7474 பக்கங்கள் 18-20