ஆளுமை:மஞ்சுளா, கண்ணன்

From நூலகம்
Name மஞ்சுளா, கண்ணன்
Pages விநாசித்தம்பி
Pages நாகபூஷணி
Birth 1976
Pages -
Place கொடிகாமம்
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஞ்சுளா, கண்ணன் (1976) யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை விநாசித்தம்பி; தாய் நாகபூஷணி. சிறுவயதிலேயே பாடல்களை இயற்றிப் பாடும் திறன் கொண்ட இவருக்கு தாயாரே குருவாக திகழ்ந்துள்ளார். இவர் இசை ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

1991-1998 வரையான காலப்பகுதிகளில் நம் நாட்டுப் பாடல்களை பாடி பலரது வரவேற்பை பெற்றதோடு 1998-2005 வரையான காலப்பகுதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைக்குழுவிலும், ஆனந்த இசைக்குழுவிலும், கீதம் இசைக்குழுவிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். ஆயிரத்துக்கு மேற்பட்ட மேடைகளில் இவர் பாடியுள்ளதோடு பல இறுவட்டுக்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது கலைத் திறமையைப் பாராட்டி வசீகர இசைக்குயில் எனும் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.