ஆளுமை:மகிழம்மா, கிருஷ்ணானந்தம்

From நூலகம்
Name மகிழம்மா
Pages ஆறுமுகம்
Pages சின்னத்தங்கம்
Birth 1916.11.24
Place தொண்டைமானாறு கெருடாவில்
Category பெண் ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகிழம்மா, கிருஷ்ணானந்தம் (1916.11.24) யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கெருடாவிலில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை ஆறுமுகம்; தாய் சித்தி சின்னத்தங்கம். யாழ்ப்ப்பாணம் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், யாழ் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். யாழ்ப்பாணம் இராமநாதன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் 1937-1940 ஆகிய ஆண்டு காலப் பகுதியில் ஆசிரியர் பயிற்சியை பெற்றார்.

பயிற்சியை முடித்து மட்டக்களப்பு நிந்தவூர் முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்றார். மூன்றாம் தரம் மாத்திரமே இவர் நியமனம் பெற்றபோது இப்பாடசாலையில் இருந்தது. 1953ஆம் ஆண்டு ஏழு மாணவர்களுடன் நான்காம் தரத்தை ஆரம்பித்தார். 1944ஆம் ஆண்டு ஒரேயொரு மாணவியை ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு படிப்பித்து பரீட்சை அனுப்பி அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தில் சித்தியடையச் செய்தார்.12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களைக் கொண்டு விழாக்களை வைத்து கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றியதுடன் பெற்றோர் மத்தியில் கல்வியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 1948ஆம் ஆண்டு Junior School Certificate வகுப்பை ஆரம்பித்து ஒரேயொரு மாணவியின் பெறுபேற்றின் மூலம் கனிஷ்ட பாடசாலையாக தரமுயர்தினார். ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் தொகையை கூட்டி கட்டங்களை அமைக்க வழிவகுத்தார். 1949ஆம் ஆண்டு கல்வி சாதாரணதர வகுப்பை ஆரம்பித்து 1950ஆம் ஆண்டு ஒரேயொரு மாணவியின் பெறுபேற்று மூலம் பாடசாலையை சிரேஷ்ட பாடசாலையாக தரமுயர்த்தினார். இதனூடாக அகில இலங்கை ரீதியில் முதலாவது முஸ்லிம் பெண்கள் மகாவித்தியாலயம் என்ற புகழை இப் பாடசாலை பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து இப்பாடசாலையில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரத்தில் சி்த்தியடைந்த மாணவியை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற வைத்து பண்டிதையாக்கினார். அகில இலங்கையில் நிந்தவூரில் முதலாவது முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தை உருவாக்கிய வரலாற்று புகழ் கொண்டவர் திருமதி மகிழம்மா கிருஷ்ணானந்தம் என்பதை இப்பிரதேச மக்கள் நன்றியுடன் நினைவுகூருகிறார்கள். இவர் இப்பாடசாலையின் மூன்றாவது அதிபராக 01.10.1940ஆம் ஆண்டு பொறுபேற்ற போது இப்பாடசாலையில் பெண்களின் கல்வியின் உச்சக்கட்டம் 3ஆம் தரம் என்பது குறிப்பிடத்தக்கது.