ஆளுமை:மகாலிங்கசிவம், பார்வதிநாதசிவம்

From நூலகம்
Name மகாலிங்கசிவம்
Pages பார்வதிநாதசிவம்
Birth 1968.06.21
Place இளவாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாலிங்கசிவம், பார்வதிநாதசிவம் (1968.06.21 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பார்வதிநாதசிவம். இவர் தனது தந்தையிடமும் க. வீரகத்தி, க. உமாமகேஸ்வரன், பி. நடராசன் ஆகியோரிடமும் கல்வி பயின்றார். இவர் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

தனது 19 ஆவது வயதிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்த இவர், 50 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 10 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். மேலும் இவர் குருகவி ம. வே. மகாலிங்கசிவம் வரலாறும் ஆக்கங்களும், பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை வாழ்வும் வகிபாகமும் ஆகிய இரு நூல்களை வெளியிட்டுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 41-42
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 367