ஆளுமை:மகாதேவன், இளையப்பா

From நூலகம்
Name மகாதேவன்
Pages இளையப்பா
Birth 1924.09.27
Pages 1982.12.25
Place திருநெல்வேலி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாதேவன், இளையப்பா (1924.09.27 - 1982.12.25) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர், விஞ்ஞானக் கட்டுரையாளர், பேச்சாளர், அறிவிப்பாளர், ஆசிரியர். இவரது தந்தை இளையப்பா. இவர் தேவன் - யாழ்ப்பாணம் என்ற பெயரில் நன்கறியப்பட்டவர்.

இவரால் யாழ்ப்பாணத்தில் தென்னவன் பிரமராஜன், விதி, இரு சகோதரர்கள், பத்தினியா பாவையா, வீரபத்தினி, நளதமயந்தி போன்ற நாடகப் பிரதிகள் எழுதப்பட்டது. இவர் வாடிய மலர்கள், மணிபல்லவம் கேட்டதும் நடந்ததும் போன்ற நாவல்களையும் அவன் சுற்றவாளி என்ற குறுநாவலையும் 'வானவெளியில்' என்ற விஞ்ஞான அறிவியற் கட்டுரை நூலையும் எழுதியுள்ளார். இவர் Treasure Island என்னும் ஆங்கில நாவலை மணிபல்லவம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார்.

இவர் யாழ் தேவன், தேவன் யாழ்ப்பாணம், ஸ்கோடா போன்ற புனைபெயர்களைக் கொண்டவர். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு தேவன்- யாழ்ப்பாணம் சிறுகதைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இவரின் சிறுகதைகள் காந்தியக்கதைகள் என்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

Resources

  • நூலக எண்: 300 பக்கங்கள் 122-124
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 38
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 288

வெளி இணைப்புக்கள்