ஆளுமை:பொன்னையா, முருகர்

From நூலகம்
Name பொன்னையா
Pages முருகர்
Birth 1922.06.11
Place அல்வாய்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னையா, முருகர் (1922.06.11 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முருகர். இவர் ஆர்மோனியக் கலை, நாடகக் கலை போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டு மு. செல்லையாவிடம் கலைப்பயிற்சி பெற்றார்.

இவர் அண்ணாவியத்தால் உருவாக்கப்பட்ட பல நாடகங்களில் நடித்ததோடு பூதத்தம்பி நாடகத்தில் நடித்து முத்திரை பதித்தார். மேலும் இவர் ஆர்மோனியம் பயின்று ஏராளமான நாடகங்களுக்குப் பக்கவாத்தியம் செய்ததுடன், பலரை ஆர்மோனியக் கலைஞராக்கினார். இவர் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, நச்சுக்கோப்பை, கல்யாணப்பரிசு, சகோதரபாசம், ஶ்ரீவள்ளி, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா உட்படப் பல நாடகங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு இவரது கலைச்சேவைக்காக மயிலிட்டி அரங்கில் கலைப்போதனைச்சுடர் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 202