ஆளுமை:பொன்னுத்துரை, அம்பலவாணர்

From நூலகம்
Name பொன்னுத்துரை
Pages அம்பலவாணர்
Pages குணலெட்சுமி
Birth 1911.03.28
Pages 1993.07.14
Place வேலணை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னுத்துரை, அம்பலவாணர் (1911.03.28-) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை அம்பலவாணர்; தாய் குணலெட்சுமி. இவர் சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை, நாரந்தனை கணேச வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் உதவி ஆசிரியராகவும் கரம்பொன் சண்முகநாத வித்தியாசாலையில் எட்டு வருடங்கள் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தீவுப்பகுதி விளைபொருட் சங்கம், பண்ணை ஆயச்சங்கம் போன்ற பல சமூக சேவை நிறுவனங்களிலும் சங்கங்களிலும் அங்கத்தவராகவும் தலைவராகவும் பதவி வகித்துத் தனது கடமைகளைச் சிறப்புற ஆற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 306-308