ஆளுமை:பொன்னம்பலவாணர், தியாகராசா

From நூலகம்
Name பொன்னம்பலவாணர்
Pages தியாகராசா
Birth 1945.10.16
Place சுழிபுரம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலவாணர், தியாகராசா (1945.10.16 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தியாகராசா. இவர் பொன்னாலை வரதராஜப் பெருமான் வித்தியாசாலை, யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் விக்றோறியாக் கல்லூரி, நல்லூர் குருகுலம் ஆகியவற்றில் தனது கல்வியை மேற்கொண்டதுடன் செ. துரைசிங்கம், பொன்முத்துக்குமாரன், யோகி கார்த்திகேசு, சி. கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் கல்வி கற்றார்.

ஈழநாடு, முரசொலிப் பத்திரிகைகளில் பத்திரிகையாளராகக் கடமை புரிந்து கட்டுரைகளை எழுதி வந்துள்ள இவர், கோவில் புராணபடனம், பாடசாலை விழாக்களில் பேச்சு ஆற்றி வந்தார். இவரால் காசிகாண்டச் செய்யுட்களை வசனமாக்கியமை, புட்பவிதி என்னும் நூலிற்குப் பொழிப்புரை எழுதியமை, பிள்ளையார் கதை விளக்கம், திருவாதவூரடிகள் புராண சிந்தனம் போன்றன உருவாக்கப்பட்டவை ஆகும்.

இவர் தமிழ் பண்டிதர், சமஸ்கிருத பிரவேச பண்டிதர், பௌராணிக வித்தகர், சித்தாந்த மணி, கலைவாருதி ஆகியப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 41