ஆளுமை:பெருமாள் வேலாயுதர்

From நூலகம்
Name பெருமாள்
Pages வேலாயுதர்
Pages சின்னாச்சி
Birth 1880
Pages 1940
Place வேலணை
Category மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெருமாள், வேலாயுதர் (1880- 1940) வேலணை, வரணியப்புலத்தைச் சேர்ந்த மருத்துவர். இவரது தந்தை வேலாயுதர்; இவரது தாய் சின்னாச்சி. இவர் ஆயுர்வேத வைத்தியத்தை முறையாகக் கற்றுப் புலமை பெற்றார். இவர் கைநாடி பார்ப்பதிலும் ஏடுகளை ஆய்வு செய்து மூலிகைகளைத் தேடி எடுத்து மருந்துக்களைத் தயாரிப்பதிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். இவர் நோயாளர்களின் பிணியைத் தீர்ப்பதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து வைத்திய நிபுணர் ஒருவரை வரவழைத்து அவரின் வழிகாட்டலில், ஆயுர்வேத வைத்தியத்தில் மிக உயர்ந்ததாகப் பேசப்படும் 'மாத்திரைக்கட்டு' என்னும் மருந்தைத் தேவையான மூலிகைகள், மருந்துக்களைப் பெற்றுத் தனது வீட்டில் ஏழு வகைகளில் தயாரித்துப் புடமிட்டு வைத்திருந்து சிகிச்சையை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் வைத்தியர் பெருமாள் என அறியப்படுகின்றார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 386-388