ஆளுமை:பெஞ்சமின் செல்வம், மரிசாற்பிள்ளை

From நூலகம்
Name பெஞ்சமின் செல்வம்
Pages மரிசாற்பிள்ளை
Birth 1906.03.24
Place மன்னார், நானாட்டான்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெஞ்சமின் செல்வம், மரிசாற்பிள்ளை (1906.03.24 - ) மன்னார், நானாட்டானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மரிசாற்பிள்ளை. இவர் தனது இளமைக் கல்வியைத் தந்தையிடம் கற்று, பின்னர் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் சார்பில் சுன்னாகத்தில் நடாத்தப்பட்ட பால பண்டிதர் வகுப்பில் 24 ஆவது வயதில் சேர்ந்து புன்னாலைக்கட்டுவன் கணேசையரிடத்தில் கற்றார்

இவர் ஏட்டுச்சுவடிகளாகக் காணப்பட்ட மன்னார் நாட்டுக்கூத்துப் புலவர் கீத்தாம்பிள்ளையின் கென்ரிக்கெம்பரதோர் நாடகத்தையும் தனது தந்தை எழுதிய ஞானசௌந்தரியையும் ஆசிரியர் பெயர் தெரியாத மூவிராசாக்கள் நாடகத்தையும் ஆராய்ந்து, தொகுத்து, எழுத்துப் பிழைகளைத் திருத்தி கையெழுத்துப் பிரதிகளாகத் திருத்தியமைத்தார்.

இவரது செயற்றிறனைப் பாராட்டி இலங்கைக் கலாசாரப் பேரவை 1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடத்திய சாகித்திய மண்டல விழாவில் கௌரவித்துப் பரிசளித்ததோடு மன்னார் மாவட்ட மக்கள் சார்பில் முசலிக் கலாசாரச் சபைத் தலைவர் வை. சொக்கலிங்கம் தலைமையில் நானாட்டானில் 1972.02.19 ஆம் திகதி பாராட்டு விழாவும் நடைபெற்றது.

Resources

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 58-60