ஆளுமை:பூபாலரெத்தினம், நாகமணி

From நூலகம்
Name பூபாலரெத்தினம்
Pages நாகமணி
Pages தங்கலட்சுமி
Birth 1968.11.15
Pages -
Place மாவடிப்பற்று, மட்டக்களப்பு
Category அண்ணாவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.



நாகமணி பூபாலரெத்தினம் (1968.10.15) இவர் மட்டக்களப்பு மாவடிப்பற்றுக் எனும் கிராமத்தினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேடமரலில் வந்த கூத்துக்கலைஞர் இவரது தந்தை நாகமணி;தங்கலட்சுமி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். தனது ஆரம்ப காலக் கல்வியை மெதஸ்டித மிஷன் பாடசாலையில் தரம் ஐந்து வரை கற்றுள்ளார். தனது சிறுவயது முதலே கூத்துகலையில் அறிமுகமாகி மிக இள வயதில் இருந்து கூத்தைப் பழக்கக்கூடிய அண்ணாவியாராகவும் ஆகியுள்ளார். அவ்வகையில் இதுவரைக்கும் 16 மேற்பட்ட கூத்துக்களைப் பழக்கியுள்ளார். கூத்தைத் தவிர “ஆனந்தக்காவடி” எனும் கிராமிய ஆட்டத்தினையும் பயிற்றுவிக்க வல்லவர். அத்துடன் நாடக்கலையிலும் ஆர்வமுடையவராகக் காணப்படுகின்றார். அவரது கிராமத்தின் வழிபாடு, கல்வி, கலை கலாசார முன்னெடுப்புக்கள் முதலான சகல விடயங்களிலும் தன்முனைப்புடன் செயற்படக்கூடிய ஒருவராக இவர் காணப்படுகிறார்.