ஆளுமை:புஸ்பவதி, அன்ரனி

From நூலகம்
Name புஸ்பவதி அன்ரனி
Pages கந்தையா இராமநாதன்
Pages ஞானப்பு
Birth 1939.11.15
Pages 2019.03.29
Place நெடுந்தீவு
Category கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஸ்பவதி, அன்ரனி (1939.11.15 நெடுந்தீவில் பிறந்த பெண் ஆளுமை ஆவார். இவரது தந்தை கந்தையா இராமநாதன்; தாய் ஞானப்பு. தனது கல்வியை ஆரம்பத்தில் நெடுந்தீவிலும் தனது ஒன்பது வயதில் இருந்து யாழ் வேம்படி உயர்தரப் பாடசாலையில் உயர்தரம் வரை கற்றார். தனது பல்கலைக்கழக கல்வியை சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் கற்று 19 ஆவது வயதில் விஞ்ஞானப்பட்டதாரியாக வெளியேறினார்.

முதலாவது ஆசிரியர் நியமனத்தை இளவாலை புனித ஹென்றியரசர் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையேற்றார். அதன் பின்பு நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக கடமையேற்றார். பின்னர் அதே பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றார்.