ஆளுமை:புவனேந்திரன், அம்பலவன்

From நூலகம்
Name புவனேந்திரன்
Pages அம்பலவன்
Pages நேசம்மா
Birth 1956.09.14
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புவனேந்திரன், அம்பலவன் (1956.09.14 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அம்பலவன்; தாய் நேசம்மா. இவர் தனது கல்வியை மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும் களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் களுவாஞ்சிக்குடி உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும் கல்முனை கார்மல்பாத்திமா கல்லூரியிலும் கற்றார். இவர் குறுமண்வெளி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையானது மட்டு சிவசக்தி வித்தியாலயமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் அங்கு ஆசிரியராகக் கடமையாற்றினார்.

இவரது முதற் கவிதையான தெய்வத்தின் திருவுருவம் 1975 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் வெளியானது. இவர் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்று அங்கும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தினார். இவரது படைப்புக்களாக ஏறக்குறைய 6 சிறுகதைகளும் 4 கட்டுரைகளும் 450 கவிதைகளும் பிரசுரமாகியுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 110-114
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 45-50