ஆளுமை:புரட்சிதாசன், தெய்வேந்திரன்
From நூலகம்
Name | புரட்சிதாசன் |
Pages | தெய்வேந்திரன் |
Pages | - |
Birth | 1978.05.28 |
Place | கிளிநொச்சி |
Category | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புரட்சிதாசன், தெய்வேந்திரன் (1978.05.28 -) கிளிநொச்சி, கோரக்கன்கட்டில் பிறந்த ஊடகவியலாளர். இவரது தந்தை தெய்வேந்திரன். இவர் ஆரம்பக்கல்வியை கிளி/ முரசுமோட்டை புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், இடைநிலைக்கல்வியை யாழ்/ கரவெட்டி விக்நேஸ்வராக் கல்லூரியிலும், உயர்கல்வியை கிளி/ மகா வித்தியாலயத்திலும் கற்றார்.
2011 இல் 'வளை ஓசை' மலரினூடாக இளமைக்கால ஊரின் நினைவுகளை மீட்டும் பதிவினை செய்தார். இவர் 'புரட்சி', 'க.தே. தாசன்', 'கரவை தர்ஷா' போன்ற புனைபெயர்கலில் கவிதை, கட்டுரைகளூடாக எழுதியுள்ளார். இவர் உதயன், வீரகேசரி பத்திரிகைகளின் செய்தியாளகவும், 'ரோசி மீடியா' நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
Resources
- நூலக எண்: 82754 பக்கங்கள் 50